ரேமா இலவச கிறிஸ்தவ புத்தகங்களை விநியோகிக்கும் ஒரு லாப நோக்கில்லா தொண்டு நிறுவனம்

ஒரு இலாப நோக்கில்லாத் தொண்டு நிறுவனமாக நாங்கள் என்ன செய்கிறோம், எங்கள் செயல்பாடுகளின் வரலாறு மற்றும் நீங்கள் எவ்வாறு பங்குபெறலாம் என்பதை அறியுங்கள்.

ரேமா இலக்கிய விநியோகிஸ்தர்கள் அதிஉன்னத தர கிறிஸ்தவ இலக்கியத்தைத் துடிப்பாக விநியோகிக்கும் ஒரே பணியில் ஈடுபட்டுள்ள பூமி முழுவதுமுள்ள விசுவாசிகளின் ஒரு குழுவாகும். 100க்கும் மேற்பட்ட நாடுகளில், 40க்கும் மேலான மொழிகளில் ஒரு எளிமையான கோட்பாட்டின்படி நாங்கள் விநியோகிக்கிறோம் - அதென்னவெனில், எங்கள் இலக்கியம் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

வேதாகமத்தைப் புரிந்துகொள்ளவும், கிறிஸ்துவை அறிந்து எங்கள் அனுதின வாழ்வில் அனுபவமாக்குவதற்கும் எங்களுக்குப்  பெரிதும் உதவியாக இருந்த புத்தகங்களை நாங்கள் விநியோகித்துக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக, லிவிங் ஸ்ட்ரீம் மின்ஸ்ட்ரியின் ஆசிரியர்கள் எழுதிய பல முக்கியமான புத்தகங்களை விநியோகிப்பதற்கு அவர்களுடன் நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றுகிறோம்.

நாங்கள் ஒரு இலாப நோக்கில்லா அறக்கட்டளை, எங்கள் விநியோகம் உலகெங்குமுள்ள விசுவாசிகள் மற்றும் சபைகளின் நன்கொடைகளால் சாத்தியமாகிறது. தேவனை ஆழமாகவும் திருப்தியான விதத்திலும் அறியும்படி தேடும் எல்லாருக்கும் நிரப்பீடு தரும் இலவசமும், விசாலமுமான கால்வாயாக இருப்பதற்கான வழிவகையை அவர்கள் எங்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

எங்கள் விசுவாசம்

மக்கள் எங்கள் நம்பிக்கைகளைக் குறித்து அவ்வப்போது கேட்கின்றனர், இதோ, எங்கள் விசுவாச அறிக்கை. எங்கள் புத்தகங்களைப் பெற இந்த நம்பிக்கைகளைப் பின்பற்றுதல் நிபந்தனை அல்ல. எந்த நம்பிக்கை உள்ள எவருக்கும் எங்கள் புத்தகங்கள் இலவசமாகக் கிடைக்கின்றன.

ரேமாவில் உள்ள நாங்கள், விசுவாசிகள் யாவரும் பகிர்ந்துகொள்கிற பொதுவான விசுவாசத்தை, அதாவது புதிய ஏற்பாட்டில் ஒரு விசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக, இந்தப் பொதுவான புதிய ஏற்பாட்டு விசுவாசம் வேதாகமம், தேவன், கிறிஸ்து, இரட்சிப்பு, நித்தியம் ஆகியவைகளைப் பற்றி நாங்கள் விசுவாசிக்கும் பின்வரும் காரியங்களைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது:

  • வேதாகமமே முழுமையான தெய்வீக வெளிப்பாடு, அதன் ஒவ்வொரு வார்த்தையும் தேவனால் பரிசுத்த ஆவியின் மூலம் அருளப்பட்டிருக்கிறது.
  • தேவன் ஒப்பற்றவர், நித்தியமாக ஒருவர். இருப்பினும், அவர் ஒருவரிலிருந்து ஒருவர் வேறுபட்ட, ஆனால் பிரிந்திராத பிதா, குமாரன், ஆவி என்று நித்தியமாக மூவொருவராகவும் இருக்கிறார்.
  • இயேசு என்ற பெயருடைய ஒரு உண்மையான, நேர்த்தியான மனிதனாயிருக்கும்படி தேவன் கிறிஸ்துவில் மனித மாம்சமானார். அவர் சிலுவையில் அறையப்பட்டு, நம் மீட்பிற்காக பதிலீடாக மரித்தார். மூன்றாம் நாள் ஒரு மகிமையான சரீரத்தோடு உயிர்த்தெழுந்து மரணத்திலிருந்து எழுந்தார். அவர் தேவனின் வலதுபாரிசத்திற்கு ஏறிச்சென்று எல்லாருக்கும் ஆண்டவராக ஆக்கப்பட்டார்.
  • மனிதன் பாவம் செய்தான், பாவம் நிறைந்தவனாயிருக்கிறான், எனவே தேவனின் நியாயத்தீர்ப்பின் கீழ் விழுந்துவிட்டான். ஆனால் கிறிஸ்துவின் பதிலீடான மரணத்தின் மூலம், பாவம், தேவனின் நியாயத்தீர்ப்பு ஆகியவைகளிலிருந்து மனிதன் இரட்சிப்பைப் பெறுவதற்கான வழி திறக்கப்பட்டது. ஒரு நபர் தேவனிடமாய் மனம்திரும்பி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்குள் விசுவாசிக்கும் போது, அவன் நித்திய இரட்சிப்பையும், பாவ மன்னிப்பையும், தேவனுக்கு முன்பாக நீதிப்படுத்தப்படுதலையும், தேவனோடு சமாதானத்தையும் கூட பெற்றுக்கொள்கிறான். இதன் அடிப்படையில், இரட்சிக்கப்பட்ட ஒரு நபர் தன்னை தேவனுடைய பிள்ளையாகவும், எல்லா விசுவாசிகளும் வளர்ந்து முதிர்ச்சிக்கென்று ஒன்றாகக் கட்டியெழுப்பப்படும் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவமுமாகவும் ஆக்குகின்ற நித்திய ஜீவனையும் சுபாவத்தையும் பெறுகிறான்.
  • கிறிஸ்து தம் விசுவாசிகளைத் தம்மிடமாய்ப் பெற்றுக்கொள்ள இந்த பூமிக்கு மறுபடி வருகிறார். நித்தியத்தில் நாம் தேவனோடு, தேவனின் தெரிந்தெடுக்கப்பட்ட மக்களுக்கான அவருடைய இரட்சிப்பின் முழுநிறைவேற்றமாகிய புதிய எருசலேமில் வாழ்வோம்.

இந்தப் புதிய ஏற்பாட்டு விசுவாசத்தை வாசகர்கள் புரிந்துகொள்வதை, அனுபவிப்பதை உச்சநிலைக்குக் கொண்டுவருமென்று நாங்கள் நம்பும் கிறிஸ்தவப் படைப்புகளின் ஓர் ஒப்பற்ற தொகுப்பை இலவசமாக விநியோகிப்பதே ரேமாவில் எங்கள் குறிக்கோள். விசுவாசிகள் கிறிஸ்துவின் மீட்பின் மூலம் அவரில் ஒரு  நித்திய இரட்சிப்பை மட்டுமல்ல, வேதாகமத்திலிருந்து வரும் ஆவிக்குரிய உணவால் நடைமுறையில் உணர்ந்தறியப்படும், அவருடைய ஜீவனாலான, ஒரு அனுதின இரட்சிப்பையும் அனுபவித்துமகிழ்கிறார்கள். இது எங்கள் அனுபவமாயிருக்கிறது; இது உங்கள் அனுபவமாகவும் இருக்குமென்று நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

எங்கள் வரலாறு

ரேமா இலக்கிய விநியோகஸ்தர்களின் 30+ ஆண்டு வரலாறு

1980களின்  மத்தியிலிருந்து, ரேமா இலவச இலக்கிய விநியோகத்தைச் செயல்படுத்திக்கொண்டிருக்கிறது. முதலில் நாங்கள் முன்னாள் சோவியத் ஐக்கிய நாடுகளுக்கு ரஷ்ய மொழியில் வேதாகமங்களையும் ஆவிக்குரிய புத்தகங்களையும் விநியோகிக்க ஆரம்பித்தோம். புத்தகங்களை வேண்டுகிற ஒவ்வொருக்கும் தபால் மூலம் அவற்றை அனுப்புவதே இந்த விநியோகத்திற்கான எங்கள் பிரதான வழியாக இருந்தது, ஆனால் அதோடு, தேவனின் வார்த்தையைப் பல இடங்களுக்குப் பரப்ப மற்ற குழுக்களுடனும் நாங்கள் ஒத்துழைத்தோம்.

1999இல் ரஷ்ய மொழிக்கான இந்த முயற்சி, விரிவான அடிக்குறிப்புகளும் ஆய்வுக் குறிப்புகளும் அடங்கிய ஒரு ரஷ்ய புதிய ஏற்பாட்டின் திரள் விநியோகத்தில் தன் உச்சத்தை எட்டியது.

2001இல் மற்ற மொழிகளிலும் நாடுகளிலும் இலவச ஆவிக்குரிய இலக்கியத்தின் தேவையை ரேமா பரிசீலிக்க ஆரம்பித்தது, இது இந்த பூமியின் மற்ற பிரதான பகுதிகளுக்குப் படிப்படியான விரிவாக்கத்தை ஏற்படுத்தியது. முதல் அணியாக, கூடுதலாக பத்து மொழிகளை இணைத்து, விநியோகத்திற்கான புத்தகத் தொகுப்பையும் நிர்ணயித்தோம்.

2006இல் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மொழிகள் உட்பட, பல்வேறு மொழிகளுக்கான திட்டங்களை ரேமா ஏற்படுத்தியது.

கடந்த 20 ஆண்டுகளில், கிறிஸ்தவ இலக்கியத்தின் இலட்சக்கணக்கானப் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன - அனைத்தும் இலவசமாக.

பங்கெடுங்கள்

நீங்கள் பங்கெடுக்கக்கூடிய மூன்று வழிகள் உள்ளன. முதிலில் உங்கள் ஜெபத்தின்மூலம், இரண்டாவது நன்கொடையின்மூலம், மூன்றாவது, உங்கள் பகுதியில் இலவச இலக்கிய வநியோகத்தில் பங்கெடுப்பதின்மூலம்.

ஜெபிப்பதின்மூலம் பங்கெடுங்கள்

பலர் தங்கள் பகுதியிலும், உலகத்தின் பல்வேறு இடங்களிலும் விநியோகத்தில் பங்கெடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் விவரங்கள் பெறுவதற்கான இந்த விண்ணப்பங்களை நாங்கள் பாராட்டுவதோடு, எங்களோடு இணைந்துகொள்வதற்கான வழிகளை விவரிக்க இந்தப் பகுதியை நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்தப் பகுதியை பங்கெடுப்பதற்கான வழிகளுக்கேற்ப மூன்று பிரிவுகளாக நாங்கள் பிரித்திருக்கிறோம் : ஜெபம், நன்கொடை, விநியோகம்.

பங்கெடுப்பதற்கான முதலும் பிரதனமுமான வழி ஜெபம். பல்வேறு மொழிகள் மற்றும் நாடுகளில் இலவசப் புத்தகங்களை நாங்கள் விநியோகிக்கையில் ஒன்று தீமோத்தேயு அதிகாரம் 2இல் காணப்படும் மனிதனின் இரட்சிப்புக்கான குறிப்பிட்ட ஜெபத்தால் நாங்கள் கவரப்பட்டிருக்கிறோம்.

நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தொடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையையும் பிரியமுமாயிருக்கிறது. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 1 தீமோ. 2:1-4

இங்கு நாம் பின்வருபவற்றைக் கவனிக்கவேண்டும்:

  • எல்லா மனுஷருக்கான விண்ணப்பங்கள், ஜெபங்கள், வேண்டுதல்கள், ஸ்தோத்திரங்கள் ஆகியவைகளை உள்ளடக்கிய பன்முனை ஜெபம்.
  • ஜெபம், ராஜாக்கள் மற்றும் அதிகாரமுள்ள யாவரும் உட்பட, எல்லா மனுஷருக்காகவும் ஏறெடுக்கப்படுகிறது. நாம் இன்றைய உலக சூழ்நிலையைப் பார்க்கும்பொழுது, தேவனுடைய வாஞ்சை நிறைவேற முன்னெப்போதையும்விட  இப்போது இது முக்கியமானது.
  • தேவனுடைய விருப்பம் இரண்டு பகுதியாலானது: எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படுவதும், அதோடு சத்தியத்தின் முழு அறிவிற்கு வருவதும் ஆகும். ஜெபத்தில் நாம் பங்கெடுப்பதும் இந்த வாஞ்சையை பிரதிபலிக்கவேண்டும்.
  • இந்த ஜெபம் மிகவும் குறிப்பானதும் ஒரு இலக்கை நோக்கியதுமாகும், ஏனென்றால் இது கலகமில்லாத அமைதலுள்ள ஒரு வாழ்க்கையின் தேவையைக்கூட குறிப்பிடுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் மனிதரை இரட்சிக்கவும் அவர்களை சத்தியத்தின் முழு அறிவிற்குக் கொண்டுவரவும் தேவனுக்கு ஒரு வழி இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு ஜெபத்தில் ஒருகூட்ட தேவமக்கள் ஈடுபடும்போது,  சில வருடங்களில் இந்தக் குறிப்புகள் அனைத்தும் நிறைவேறுமென்று எங்கள் அனுபவத்தில் கண்டிருக்கிறோம். சத்தியத்தின் முழு அறிவை இந்தப் புத்தகங்கள் இலவசமாக பரப்புகின்ற இந்த வேளையில் அநேகர் இவ்விதமாக ஜெபிக்கக்கூடுமென்று நாங்கள் உண்மையாக நம்புகிறோம்.

நன்கொடை அளிப்பதின்மூலம் பங்கெடுங்கள்

ரேமா 1982இல்  நிறுவப்பட்ட  ஒரு இலாபநோக்கில்லா நிறுவனம், இது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வாஷிங்டன் மாநிலத்திலுள்ளது. யு.எஸ். உள்நாட்டு வருவாய் சட்டம், பிரிவு 501 (c)(3)இன்படி, ரேமாவுக்கான நன்கொடைகள் வரி கழிவுக்கு தகுதியானது. ரேமாவின் நிதியை நிர்வாகிக்கும் ஒரு சுயாதீனமான நிர்வாகிகள் குழு இருக்கின்றது.

எல்லா நன்கொடைகளும் வரவேற்கப்படுகின்றன, அவை யாவும் வேதாகமங்கள் மற்றும் கிறிஸ்தவ இலக்கிய விநியோகத்திற்காகவும், வேதாகமத்திலடங்கியுள்ள சத்தியங்களைப் புரிந்துகொள்ள, அனுபவிக்க வாசகர்களுக்கு உதவும் மாநாடுகள், கருத்தரங்குகள் போன்ற விநியோகத்துடன்  தொடர்புடைய செயல்பாடுகளுக்காகவும் பயன்படுத்தப்படும்.

உங்கள் தனிப்பட்ட விவரங்கள் வியாபார நோக்கங்களுக்காக வெளியிடப்படாது, மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளப்படாது.

கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிய விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்.
லூக்கா 6:38

ரேமாவுக்கு கொடுக்கும்படி ஆண்டவரால் பாரப்படுத்தப்படுகிறவர்கள் பின்வரும் வழிகளில் அன்பளிப்பு கொடுக்கலாம்:

Make a Donation

தன்னார்வத் தொண்டாற்றுவதன்மூலம் பங்கெடுங்கள்

ஆகையால், நீங்கள்...போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே... ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும்...கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும்...உங்களுடனேகூட இருக்கிறேன். மத்தேயு 28:19-20

பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள். அப்.1:8

பூமியின் பல்வேறு இடங்களில் இந்த இலவச இலக்கிய விநியோகத்தில் பங்குபெற விரும்புபவர்கள், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்

எங்கள் இலவச கிறிஸ்தவப் புத்தகங்கள்

Available in eBook or Printed Book Format

Our books can help you know the Bible, learn about Christ, and supply practical help for your Christian life. This series contains 7 books that are in 3 sets. The topics in this series progress and are a wonderful supply for everyone.

Learn More

மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்