கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோயை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?
அண்மையில் பூமி முழுவதும் கொரோனா வைரஸின் கொடிய பரவுதலால், நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்தச் சூழ்நிலையில் அநேகர் உடனேயே செய்யும் காரியம், கவலைப்படுவதும் பயப்படுவதுமே. ஆனால் இதற்கு மறுமொழி கொடுக்க வேறொரு வழி இருக்கிறது — நாம் கடவுளை நாட வேண்டும்!!
கொள்ளை நோய் ஏற்படும் காலமானது, ஜனங்கள் "தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடுவதற்கு" ஒரு திட்டவட்டமான வாய்ப்பை அளிக்கிறது என்று தேவன் கூறுகிறார் (2 நாளா. 7:14) "சமாதானத்தின் தேவன்" (1 தெச. 5:23) வானத்தில் மட்டும் இருக்க விரும்பவில்லை, மாறாக அவர் நம்மால் கண்டுபிடிக்கப்படவும், நமக்கு சமாதானமாக இருக்கவும் விரும்புகிறார். இயேசு நம்மிடம், “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்" என்று கூறுகிறார். (யோவான் 14:1) நாம் கலக்கமடைய வேண்டியதில்லை. நாம் மனஉளைச்சலிலும் பயத்திலும் வாழ வேண்டியதில்லை. இன்னொரு வழி இருக்கிறது. “கர்த்தர் சமீபமாய் இருக்கிறார்” (பிலி. 4:5).
ஆனால் தேவன் பரலோகத்தில் மட்டும் இருந்தால், அவர் எப்படி நமக்கு அருகில் இருக்க முடியும்? நம் ஜீவனாகவும் நம் சமாதானமாகவும் இருக்கும்படி தேவன் பல படிகளின் ஊடாகக் கடந்து வந்ததாக வேதாகமம் கூறுகிறது. அவர் நம்முடன் வாழவும் நம் மனித சூழ்நிலைகளைத் தாமே நேரடியாக அனுபவிக்கவும் கூடும்படியாக 2,000 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பரலோகத்திலிருந்து இறங்கி, இயேசு என்ற மனிதனாக அவதரித்தார். இயேசு இந்த பூமியில், மனித வாழ்க்கை என்னவாக இருக்க வேண்டும் என்பதற்கு மாதிரியாக, ஒரு பரிபூரணமான மனித வாழ்க்கை வாழ்ந்தார் (யோவா. 1:1, 14) - அதாவது, நம்மைப் பாதிக்கும் பாவத்தின் விஷத்தால் சீர்குலைக்கப்படாததும், விஷத்தின் பிரதானமான விளைவாகிய மரணத்துக்கு உட்படாததுமான வாழ்க்கை வாழ்ந்தார். இயேசு மனித வரலாற்றை நேர்மறையான விதத்தில் பாதித்த அளவுக்கு வேறு எந்த மனிதனும் செய்ததில்லை. இயேசு தாம் சென்ற இடமெல்லாம், தம்மைத் தேடுகிறவர்களுக்கு சமாதானத்தைக் கொண்டுவந்தார்.
அதன் பின்னர், பாவம், மரணம் என்ற பிரச்சினையைத் தீர்க்க, இயேசு சிலுவைக்குச் சென்று நமக்குப் பதிலாளாக மரணத்தை அனுபவித்தார் (ஏசா. 53:4-6). சிலுவையில், பாவத்தின் விஷத்தை முறிப்பதற்கான தெய்வீக மருந்தை அவர் உற்பத்தி செய்தார்—பாவத்தையும் மரணத்தையும் விழுங்கும்படி நமக்குள் உட்செலுத்துவதற்காக விடுவிக்கப்பட்ட அவரது நித்திய ஜீவனே அந்த மருந்து. நாம் அழிந்துபோகாமல், அவருக்குள் விசுவாசிப்பதன்மூலம் (யோவான் 3:16) பரிசுத்தம் மற்றும் நீதியுள்ள தேவனோடு சமாதானம் பெற்று, நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி, அவர் நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்காக நமக்காய் மரித்தார் (எபே. 2:13-14) அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், நாம் தேவனுடனும் மற்றவர்களுடனும் சமாதானம் பெற முடியும். பின்னர், தாம் உயிர்த்தெழுந்த தினத்தின் மாலையில், அவர் தம் சீஷர்களுக்குத் தோன்றி, “உங்களுக்குச் சமாதானம்” என்று கூறினார், “பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறி அவர்களுக்குள் சுவாசித்து ஊதினார். (யோவா. 20:19-22).
இப்போது, இன்று, "அந்த வார்த்தை உங்களுக்குச் சமீபமாய் உங்கள் வாயிலும் உங்கள் இருதயத்திலும் இருக்கிறது...இயேசுவைக் கர்த்தர் என்று உங்கள் வாயினால் அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று உங்கள் இருதயத்தில் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவீர்கள்"(ரோ. 10:8-9). இயேசுவை உங்கள் சமாதானமாகப் பெறுவதற்கும், இந்த உலகத்திலுள்ள பாவம், இருள், மற்றும் மரணத்திலிருந்து காப்பாற்றப்படுவதற்கும் ஓர் எளிய வழி, பின்வருமாறு ஜெபிப்பதாகும்:
கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை நம்புகிறேன்! கர்த்தராகிய இயேசுவே, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் என்னைக் காப்பாற்றும்! கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை என் ஜீவனாகவும் என் சமாதானமாகவும் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்! கர்த்தராகிய இயேசுவே, என்னில் வாழ எனக்குள் வந்ததற்காய் நன்றி!
இயேசுவைப் பெற இவ்வாறு ஜெபித்தபிறகு, நீங்கள் அவருடன் தொடர்ந்து ஐக்கியம் கொள்வதை தொடர்ச்சியாக வழக்கப்படுத்திக்கொள்ளலாம். தேவனோடு ஐக்கியம் கொள்வது என்றால் அவருடன் உண்மையான விதத்தில் உரையாடுவதுதான். "நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்" (பிலி. 4:6) ஜெபத்தில் அவரிடம் வாருங்கள். உங்கள் கவலைகளை அவரிடம் திறந்து, அவர் யார், அவர் உங்களுக்காக என்ன செய்தார் என்பதற்காக அவருக்கு நன்றி கூறுங்கள். அவ்வாறு செய்யும்போது, அவருடைய இரட்சிப்பில் நீங்கள் நுழையலாம், “அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (வ. 7).
தேவன் யார் என்பதையும், இயேசுவில் அவர் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதையும் பற்றி மேலும் அறிய, சில இலவச புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்யும்படி உங்களை அழைக்கிறோம் இதோ எங்கள் இணையதளம்: